/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காலாப்பட்டு கால்வாய் பணி விசாரணைக்கு கவர்னர் உத்தரவுகாலாப்பட்டு கால்வாய் பணி விசாரணைக்கு கவர்னர் உத்தரவு
காலாப்பட்டு கால்வாய் பணி விசாரணைக்கு கவர்னர் உத்தரவு
காலாப்பட்டு கால்வாய் பணி விசாரணைக்கு கவர்னர் உத்தரவு
காலாப்பட்டு கால்வாய் பணி விசாரணைக்கு கவர்னர் உத்தரவு
ADDED : பிப் 11, 2024 02:07 AM
பெரியகாலாப்பட்டு-மாத்துார் ரோட்டில் இ.சி.ஆர்., மெயின் ரோடு முதல், சட்டக் கல்லூரி வரையில் கால்வாய் பணியை மேற்கொள்ள 2015ல் பொதுப்பணி துறையால் 2 கோடியே 8 லட்சத்து 96 ஆயிரத்து 61 ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது.
அப்பணியை தனியார் ஒப்பந்ததாரர் ரூ 1 கோடியே 51 லட்சத்து 89 ஆயிரத்து 565 ரூபாய்க்கு டென்டர் எடுத்து, அப்பணியை செய்து முடித்து கூடுதலாக ரூ 14 லட்சத்து 76 ஆயிரத்து 518 ரூபாய் பெற்றார்.
இறுதியாக ஒரு கோடியே 66 லட்சத்து 66 ஆயிரத்து 83 ரூபாய் பெற்று பணியை முடித்துள்ளார். ஆனால், இந்த கால்வாய் பணிக்கு ஒப்பந்தம் கோரிய தொகையை விட கூடுதலான தொகையை செலவிட்டும் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன. ஆங்காங்கே அரைகுறையாக துண்டு துண்டாக நிற்கிறது.இதுகுறித்து பெரியகாலாப்பட்டு சுனாமி குடியிருப்பு மக்கள் நல சங்கம், கவர்னருக்கு புகார் அனுப்பி இருந்தது.
காலாப்பட்டு மாத்துார் ரோடு சைடு வாய்க்கால் அமைக்கும் பணி சம்பந்தமாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். 2015ல் செலவிடப்பட்ட தொகைக்கு உரிய வேலை நடைபெற்றுள்ளதா என்பதை ஆய்வு செய்து, தவறுக்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறப்பட்டு இருந்தது.இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் தமிழிசை, பொதுப்பணித் துறை செயலருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனால் காலாப்பட்டு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.