/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நுாறு நாள் வேலை திட்டம் அமைச்சர் துவக்கிவைப்புநுாறு நாள் வேலை திட்டம் அமைச்சர் துவக்கிவைப்பு
நுாறு நாள் வேலை திட்டம் அமைச்சர் துவக்கிவைப்பு
நுாறு நாள் வேலை திட்டம் அமைச்சர் துவக்கிவைப்பு
நுாறு நாள் வேலை திட்டம் அமைச்சர் துவக்கிவைப்பு
ADDED : பிப் 06, 2024 06:08 AM

வில்லியனுார் : மங்கலம் தொகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மூன்று கிராமங்களில் நுாறு நாள் வேலையை வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் துவக்கிவைத்தார்.
புதுச்சேரி ஊரக வளர்ச்சித் துறை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மங்கலம் தொகுதியை சேர்ந்த உறுவையாறு பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றின் கரை, சிவராந்தகம் கிராமத்தில் குடுவைாறு மற்றும் அரியூர் ஏரிக்கரை பகுதியில் நுாறு நாள் வேலை திட்டத்தை வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயகுமார் துவக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயளர் நெடுஞ்செழியன், திட்ட இயக்குனர் அருள்ராஜன், செயற் பொறியாளர் பாலசுப்ரமணியன், வில்லியனுார் வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன், உதவிப் பொறியாளர் இராமன், இளநிலைப் பொறியாளர் தன்ராஜ், பணி ஆய்வாளர் ரங்கராஜ், கிராம திட்ட ஊழியர்கள் ஜெயமூர்த்தி, வினோத்குமார், திருமால் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.


