/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டிஜிட்டல் செயலியில் கணக்கெடுப்பு மக்கள் பங்கேற்க சுகாதாரத்துறை அழைப்பு டிஜிட்டல் செயலியில் கணக்கெடுப்பு மக்கள் பங்கேற்க சுகாதாரத்துறை அழைப்பு
டிஜிட்டல் செயலியில் கணக்கெடுப்பு மக்கள் பங்கேற்க சுகாதாரத்துறை அழைப்பு
டிஜிட்டல் செயலியில் கணக்கெடுப்பு மக்கள் பங்கேற்க சுகாதாரத்துறை அழைப்பு
டிஜிட்டல் செயலியில் கணக்கெடுப்பு மக்கள் பங்கேற்க சுகாதாரத்துறை அழைப்பு
ADDED : மே 11, 2025 04:01 AM
புதுச்சேரி: மக்களிடையே காணப்படும் உடல் மற்றும் ஞாபகதிறன் குறைபாடுகளை கண்டறிந்து உதவி தொழில் நுட்ப சாதனங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய மதிப்பீடும் டிஜிட்டல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து உழவர்கரை நகராட்சி அலுவலக செய்திக்குறிப்பு:
இந்தியாவின் 25 மையங்களில் முக்கியமான ஆய்வினை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துவங்கியுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக புதுச்சேரியில் ஜிப்மர் ஆய்வுத் தளமாக செயல்படுவதற்கு புதுச்சேரி அரசின் ஒத்துழைப்பை பெற்றுள்ளது.
இதற்காக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ரவிசந்திரன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் குழு மற்றும் ஜிப்மர் தளத்தின் முதன்மை ஆய்வாளர் வெங்கடாசலம் குழுவினருடன் ஆலோசனை நடத்தினர்.
அந்தந்த பகுதியில் செயல்படும் முதன்மை சுகாதார நிலையங்களின் கீழ் பணியாற்றும் ஆஷா பணியாளர்கள், உதவி செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரத் தொழில்நுட்ப நிபுணர்களின் ஒத்துழைப்பு தரவுச் சேகரிப்பை எளிதாக்கும். இந்த ஆய்வு புதுச்சேரி மக்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், மக்கள் பயன்பாட்டில் உள்ள உதவி பொருட்களின் அணுகுமுறை மற்றும் பயன்பாட்டு முறைகள் பற்றி தெரிந்துக்கொள்ள ஏதுவாக நடைபெற வேண்டும் என்றார்.
இத்திட்டம் மூலம் மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், எளிய அணுகுமுறையில் உதவி தொழில்நுட்பங்களை பெறவும் தேவையான தரவுகளை சேகரித்து அரசு நல திட்டங்களை சிறப்பாக திட்டமிடும் வகையில் இந்த ஆய்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்கணக்கெடுப்பு உழவர்கரையில் உள்ள 21 வார்டுகளில் உள்ள வீடுகளில் பயிற்சி பெற்ற புல ஆய்வாளர்கள் மூலம் டிஜிட்டல் செயலி உதவியோடு தேவையான விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன. மக்கள் அனைவரும் தவறாமல் இக்கணக்கெடுப்பில் கலந்துக் கொள்ள வேண்டும்.