சுதர்சன் திருமண மஹால் திறப்பு விழா
சுதர்சன் திருமண மஹால் திறப்பு விழா
சுதர்சன் திருமண மஹால் திறப்பு விழா
ADDED : பிப் 12, 2024 06:26 AM

திருக்கனுார் : திருக்கனுார், கூனிச்சம்பட்டு ரோடு வி.ஐ.பி., நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுதர்சன் ஏ.சி., திருமண மஹாலை அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்து வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரி மாநிலம், மண்ணாடிப்பட்டு தொகுதி, திருக்கனுார், கூனிச்சம்பட்டு ரோடு, வி.ஐ.பி. நகரில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள ஸ்ரீ சுதர்சன் ஏ.சி., திருமண மஹால் திறப்பு விழா நேற்று நடந்தது.
திறப்பு விழாவில் திருமண மஹால் உரிமையாளர், பா.ஜ., வர்த்தகப் பிரிவு மாநில தலைவர் கலியபெருமாள், உஷாராணி கலியபெருமாள் ஆகியோர் வரவேற்றனர்.
விழாவில், புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று சுதர்சன் ஏ.சி., திருமண மஹாலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து,வாழ்த்து தெரிவித்தார்.
விழாவிற்கு திண்டிவனம் தொகுதி தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன் முன்னிலை வகித்தார்.
திறப்பு விழாவில் பங்கேற்றவர்களை, கே.ஆர்.பாளையம், கூனிச்சம்பட்டு ரோட்டில் உள்ள ஆதித்யா பெயிண்ட்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர் ராஜூ வரவேற்று, நன்றி கூறினார்.
விழாவில், பா.ஜ.,மாநில பொதுச் செயலாளர் மோகன்குமார், மாநில துணைத் தலைவர் அகிலன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள், உறவினர்கள், நண்பர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.