/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மலேசியாவில் வாழும் இந்தியா, சீனா வம்சா வழியினர் புதுச்சேரியில் பிரசாரம் மலேசியாவில் வாழும் இந்தியா, சீனா வம்சா வழியினர் புதுச்சேரியில் பிரசாரம்
மலேசியாவில் வாழும் இந்தியா, சீனா வம்சா வழியினர் புதுச்சேரியில் பிரசாரம்
மலேசியாவில் வாழும் இந்தியா, சீனா வம்சா வழியினர் புதுச்சேரியில் பிரசாரம்
மலேசியாவில் வாழும் இந்தியா, சீனா வம்சா வழியினர் புதுச்சேரியில் பிரசாரம்
ADDED : செப் 14, 2025 08:02 AM

புதுச்சேரி : மலேசியா நாட்டில் வாழும், இந்தியா மற்றும் சீனா வம்சா வழியை சேர்ந்த குழுவினர், மக்கள் நலன் குறித்து, புதுச்சேரியில் பிரசாரம் சென்றனர்.
புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த இவர்கள், நேற்று மாலை 5:00 மணிக்கு, புதுச்சேரி கடற்கரை காந்தி சிலையில் இருந்து நடைபயணம் சென்றனர்.
அமைச்சர் லட்சுமி நாராயணன், இந்தியாவுக்கான, மலேசிய துாதரக தலைமை அலுவலர் சரவணகுமார் குமார வாசகம் ஆகியோர் பிரசார பயணத்தை கொடியசைத்து, துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில், மலேசியா அரசின், இந்திய இலங்கைக்கான சுற்றுலா இயக்குனர் முஸ்தபா, மலேசிய சுற்றுலா பயணிகள் குழுவின் தலைவர் தத்தோ சந்திரன், முன்னிலை வகித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ., இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வு குறித்து பிரசாரம் மேற்கொண்ட இவர்கள், கடற்கரை சாலை, துய்மா வீதி வழியாக சென்று மீண்டும் கடற்கரையை வந்தடைந்தனர்.