/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கல்லுாரிகள் இடையிலான போட்டி மாணவிகள் ஆர்வமாக பங்கேற்புகல்லுாரிகள் இடையிலான போட்டி மாணவிகள் ஆர்வமாக பங்கேற்பு
கல்லுாரிகள் இடையிலான போட்டி மாணவிகள் ஆர்வமாக பங்கேற்பு
கல்லுாரிகள் இடையிலான போட்டி மாணவிகள் ஆர்வமாக பங்கேற்பு
கல்லுாரிகள் இடையிலான போட்டி மாணவிகள் ஆர்வமாக பங்கேற்பு
ADDED : பிப் 01, 2024 11:28 PM

புதுச்சேரி: இதயா கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த தேசிய அளவிலான கல்லுாரிகளுக்கு இடையிலான போட்டியில் மாணவிகள் ஆர்வமாக பங்கேற்றனர்.
புதுச்சேரி இதயா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வணிகவியல் துறை சார்பில் தேசிய அளவிலான கல்லுாரிகளுக்கு இடையிலான போட்டி துவக்க விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் பாத்திமா தலைமை தாங்கினார். போட்டிகளை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்து பேசுகையில், 'போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் பல்வேறு திறன்களையும் நாம் வளர்த்து கொள்ள வேண்டும்.
வணிகவியல் துறை நான் படித்த துறை. இத்துறையானது ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் வேலைவாய்ப்பினை உருவாக்கி தரும் துறையாக உள்ளது.
அடிப்படை கல்வி முக்கியமானது. இக்கல்வி மாணவிகளுக்கு அடிப்படை அறிவினை அளித்து சிறந்த அதிகாரிகளாக பணியாற்ற துணை புரிகிறது' என்றார். வைத்தியநாதன் எம்.எல்.ஏ., வாழ்த்தி பேசினார். வணிகவியல் துறை தலைவர் கலைச்சல்வி, பேராசிரியர் பார்கவி உள்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து குழு நடனம், மீம்ஸ் போட்டி, புதிர், வர்த்தக தொடர்பு, வர்த்தக போர் என பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடந்தன. பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவிகள் ஆர்வமாக பங்கேற்றனர்.


