/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ துப்பாக்கி சுடும் போட்டி காரைக்கால் மாணவர் சாதனை துப்பாக்கி சுடும் போட்டி காரைக்கால் மாணவர் சாதனை
துப்பாக்கி சுடும் போட்டி காரைக்கால் மாணவர் சாதனை
துப்பாக்கி சுடும் போட்டி காரைக்கால் மாணவர் சாதனை
துப்பாக்கி சுடும் போட்டி காரைக்கால் மாணவர் சாதனை
ADDED : ஜூன் 19, 2025 07:23 AM

காரைக்கால் : புதுச்சேரியல் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் காரைக்கால் மாணவர் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் தென்னிந்திய அளவில் பல பிரிவுகளில் துப்பாக்கி சுடும் போட்டிகள் கடந்த 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 600க்கு மேற்பட்ட துப்பாக்கி சுடும் வீரர்கள் பங்கேற்றனர்.
ஆடவர் பிரிவில் 10 மீட்டர் பீப் சைட் ஏர் ரைபில் பிரிவில் காரைக்கால் பகுதியை சேர்ந்த சச்சித்குணசீலன் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கத்தை வென்றார். நேற்று முன்தினம் புதுச்சேரியில் உள்ள ராம் இன்டர்நேஷனல் தனியார் ஓட்டலில் பரிசுகள் வழங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்படுகளை வஜ்ரா அகடாமியினர் செய்திருந்தனர். ஏராளமான துப்பாக்கி சுடும் வீரர்கள் கலந்துகொண்டனர்.