/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வேதபுரீஸ்வரர் கோவிலில் கொலு பொம்மை கண்காட்சி வேதபுரீஸ்வரர் கோவிலில் கொலு பொம்மை கண்காட்சி
வேதபுரீஸ்வரர் கோவிலில் கொலு பொம்மை கண்காட்சி
வேதபுரீஸ்வரர் கோவிலில் கொலு பொம்மை கண்காட்சி
வேதபுரீஸ்வரர் கோவிலில் கொலு பொம்மை கண்காட்சி
ADDED : செப் 04, 2025 05:40 AM
புதுச்சேரி : காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் 31ம் ஆண்டு கொலு பொம்மை கண்காட்சி நேற்று தொடங்கியது.
புதுச்சேரி பொம்மை உற்பத்தியாளர்கள் சேவை தொழிலியல் கூட்டுறவு சங்கம் கடந்த 30 ஆண்டுகளாக கொலு பொம்மை கண்காட்சியை நடத்தி வருகிறது.
இந்தாண்டு நவராத்திரிக்கான கொலுபொம்மை கண்காட்சி காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை துவங்கியது. கண்காட்சியை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
இக்கண்காட்சி வரும் அக்டோபர் 2ம் தேதி வரை 30 நாட்களுக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியில் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இங்கு வழக்கமான பொம்மைகளுடன், அயோத்தி ராமர், ராமானுஜர் வேதபாட சாலை, வளைகாப்பு அம்மன், கும்பகர்ணா செட் உள்ளிட்ட 34 புதிய வகை பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த பொம்மைகளை புதுச்சேரியை சேர்ந்த பாரம்பரியமிக்க கலைஞர்கள் உருவாக்கியுள்ளனர். புதுச்சேரியின் சிறந்த கலைஞர் என மாநில விருதும், பத்மஸ்ரீ விருதும் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.