/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பஞ்சவடீ கோவிலில் இன்று கும்பாபிேஷக ஆண்டு விழா பஞ்சவடீ கோவிலில் இன்று கும்பாபிேஷக ஆண்டு விழா
பஞ்சவடீ கோவிலில் இன்று கும்பாபிேஷக ஆண்டு விழா
பஞ்சவடீ கோவிலில் இன்று கும்பாபிேஷக ஆண்டு விழா
பஞ்சவடீ கோவிலில் இன்று கும்பாபிேஷக ஆண்டு விழா
ADDED : ஜூன் 17, 2025 12:43 AM
புதுச்சேரி : பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் இன்று கும்பாபிேஷக ஆண்டு விழா சிறப்பு பூஜை நடக்கிறது.
புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், பஞ்சவடீயில் அமைந்துள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் இன்று 17 ம் தேதி கும்பாபிேஷக ஆண்டு விழா சிறப்பு பூஜை நடக்கிறது. அதனையொட்டி காலை 7:30 மணிக்கு, ஸ்ரீவாரி சீனிவாசப் பெருமாள் சன்னதிக்கு பின்புறம் அமைந்துள்ள யாகசாலையில் கடம் பிரதிஷ்டை செய்து சிறப்பு ேஹாமங்கள் நடக்கிறது.
காலை 8:00 மணிக்கு வலம்புரி மகா கணபதி, சீதா சமேத பட்டாபிேஷக ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி மற்றும் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம் போன்ற மங்கள திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது.
தொடர்ந்து காலை 10 மணிக்கு மேல் யாகசாலையில் பூர்ணாஹூதி முடிந்து கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து, அனைத்து சன்னதிகளிலும் கலாசாபிேஷகம் நடைபெறும். தொடர்ந்து பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் அனைத்து சன்னதிகளிலும் மகா தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.