ADDED : ஜூன் 10, 2026 04:43 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வில்லியனுாரில் லாரி டிரைவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனுார், கோட்டைமேடு மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் பாலு, 63; லாரி டிரைவர். குடிப்பழக்கம் உள்ள இவர், நேற்று முன்தினம் காலை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அவரை வீட்டில் விட்டுவிட்டு அவரது மனைவி அமுதா கடைக்கு சென்றார்.
பின், அமுதா வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பாலு வீட்டில் மின்விசிறியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.





