Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் சந்திர கிரகணம் கோவில் நடை அடைப்பு 

 புதுச்சேரியில் சந்திர கிரகணம் கோவில் நடை அடைப்பு 

 புதுச்சேரியில் சந்திர கிரகணம் கோவில் நடை அடைப்பு 

 புதுச்சேரியில் சந்திர கிரகணம் கோவில் நடை அடைப்பு 

ADDED : மார் 04, 2026 04:57 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: புதுச்சேரியில் சந்திர கிரகணம் காரணமாக கோவில்களின் நடை சாத்தப்பட்டு, பரிகார பூஜைக்கு பின் திறக்கப்பட்டது.

சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும், ஒரே நேர்கோட்டில் வரும் போது, பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்தாண்டுக்கான முழு சந்திர கிரகணம் நேற்று மாலை 3.20 முதல் 6.47 மணி வரை நிகழ்ந்தது.

அப்போது, நிலா சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்ததுடன், நீல விளிம்புடன் காட்சி அளித்தது. சந்திர கிரகணத்தை புதுச்சேரியில் பொதுமக்கள் தொலை நோக்கிகளை கொண்டு பார்த்து மகிழ்ந்தனர்.

சந்திர கிரகணம் காரணமாக புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர், வரதராஜ பெருமாள், வேத புரீஸ்வரர் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் நடை சாத்தப்பட்டிருந்தது.

சந்திர கிரகணம் முடிந்து, இரவு 7:00 மணிக்கு பின், கோவில்கள் நடை திறக்கப்பட்டது. கோவில் வளாகம் தண்ணீரால் சுத்தப்படுத்தப்பட்டு, பரிகார பூஜை செய்தபின் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us