/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கேபிள் டிவி., ஆபரேட்டர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைதுகேபிள் டிவி., ஆபரேட்டர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
கேபிள் டிவி., ஆபரேட்டர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
கேபிள் டிவி., ஆபரேட்டர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
கேபிள் டிவி., ஆபரேட்டர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
ADDED : ஜன 24, 2024 04:34 AM
திருபுவனை : சந்தா தொகை கேட்ட கேபிள் டிவி., ஆபரேட்டர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, திருபுவனை அடுத்த கலிதீர்த்தாள்குப்பம், நடுத்தெருவை சேர்ந்தவர் சுப்ராயன் மகன் சரவணன், 45; அப்பகுதியில் கேபிள் டிவி., நடத்தி வருகிறார். கலிதீர்த்தாள்குப்பம், தொட்டித் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை மகன் கூழ்பானை சுகுமார் (எ) சுகுமார்,38; இவர், கேபிள் டிவி., இணைப்பிக்கு மாத சந்தா கட்டவில்லை. கடந்த 3 நாட்களுக்கு முன் சரவணன் சந்தா தொகை கேட்டபோத, சுகுமார் பணம் தரவில்லை. அதனால், அவர் வீட்டிற்கு செல்லும் கேபிள் இணைப்பை சரவணன் துண்டித்தார்.
இதனால், ஆத்திரம் அடைந்த சுகுமார் நேற்று மதியம் 12:30 மணியளவில் சரவணன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசினார். பெட்ரோல் குண்டு வீட்டு சுவரில் பட்டு வெடித்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை.
இதுகுறித்த புகாரின்பேரில், திருபுவனை போலீசார் வழக்கு பதிந்து, கூழ்பானை சுகுமாரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.


