புதுச்சேரி: கட்டுமானப் பணியின் போது, கொத்தனார் நெஞ்சுவலியால் இறந்தார்.
கடலுார், சின்ன கங்கணாங்குப்பத்தை சேர்ந்தவர் புருேஷாத்தம்மன், 47; கொத்தனாரான இவர், நேற்று காலை புதுச்சேரி காலப்பட்டு மத்திய சிறையில் கட்டுமான பணியை மேற்கொண்டபோது, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார்.
இதுகுறித்து காலப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


