ADDED : பிப் 02, 2024 03:44 AM

புதுச்சேரி: மேட்டுப்பாளையம் ஆண்கள் ஐ.டி.ஐ.,யுடன் அடல் இன்குபேஷன் சென்டர் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
புதுச்சேரி, தொழில்நுட்ப கல்லுாரியில் இயங்கும் அடல் இன்குபேஷன் சென்டரில் புதுச்சேரி அரசின் மேட்டுப்பாளையம் ஆண்கள் ஐ.டி.ஐ.,யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் புரிந்துள்ளது.
அடல் இன்குபேஷனின் செயல் இயக்குனர் சுந்தரமூர்த்தி, ஐ.டி.ஐ., நிறுவன மேலாண்மை குழு தலைவர் நந்தகுமார், ஐ.டி.ஐ., முதல்வர் அழகானந்தன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஆவணங்ளை பரிமாறிக்கொண்டனர்.
ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு அறிவு பகிர்வு, திறன் மேம்பாடு மற்றும் மனிதவள மேலாண்மை குறித்த பயிற்சி ஆகியவை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பகிர்ந்து கொள்ளப்பட உள்ளது. நிகழ்ச்சியில் அடல் இன்குபேஷன் சென்டரின் தலைமை செயல் அதிகாரி விஷ்ணு வரதன், தலைமை நிர்வாக அதிகாரி ராஜகுமார், மேலாளர் காமேஸ்வரன், ட்ரோன் பொறியாளர் ஹரி தர்ஷன், செயல் திட்ட வடிவமைப்பாளர் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


