/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காரைக்காலில் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை காரைக்காலில் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
காரைக்காலில் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
காரைக்காலில் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
காரைக்காலில் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
ADDED : செப் 24, 2025 06:03 AM

காரைக்கால் : காரைக்காலில் பொதுப்பணித் துறை, மீன்வளத் துறை மற்றும் சுற்றுலாத் துறை உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் பருவ மழை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். அமைச்சர் திருமுருகன், நாஜிம் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.
திட்டப்பணிகள் மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து கலெக்டர் ரவிபிரகாஷ் காணொலி காட்சி மூலம் விளக்கினார்.
கூட்டத்தில் ரூ.16 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள ஆயுஷ் மருத்துவமனை, அதிதீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட கட்டட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. திருநள்ளாறில் பேட்டை சாலையில் கட்டப்பட்டுள்ள யாத்ரி நிவாஸ் விடுதியை சனி பெயர்ச்சி விழாவுக்கு முன் திறப்பது, படகு குழாம் அரசலாற்றில் மிதக்கும் உணவகம், கடற்கரை மேம்பாடு உள்ளிட்ட சுற்றுலா மேம்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
துணை கலெக்டர் பூஜா, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், மீன்வளத்துறை துணை இயக்குனர் நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.