/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நுாறு நாள் வேலை திட்டப்பணி அமைச்சர் துவக்கி வைப்பு நுாறு நாள் வேலை திட்டப்பணி அமைச்சர் துவக்கி வைப்பு
நுாறு நாள் வேலை திட்டப்பணி அமைச்சர் துவக்கி வைப்பு
நுாறு நாள் வேலை திட்டப்பணி அமைச்சர் துவக்கி வைப்பு
நுாறு நாள் வேலை திட்டப்பணி அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : மே 22, 2025 03:34 AM

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு தொகுதியில் நுாறு நாள் வேலை திட்ட பணிகளை அமைச்சர் நமச்சிவாயம் பூஜை செய்து துவக்கி வைத்தார்.
மண்ணாடிப்பட்டு தொகுதியில் திருக்கனுார், கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு, தேத்தாம்பாக்கம் கிராமங்களில் வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நுாறு நாள் வேலை திட்ட பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது.
விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், வர்த்தக அணி மாநில தலைவர் கலியபெருமாள், அ.தி.மு.க., நிர்வாகி சுத்துக்கேணி பாஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.