/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொருளாதார குற்றப்பிரிவு துவங்கப்படும் அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு பொருளாதார குற்றப்பிரிவு துவங்கப்படும் அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
பொருளாதார குற்றப்பிரிவு துவங்கப்படும் அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
பொருளாதார குற்றப்பிரிவு துவங்கப்படும் அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
பொருளாதார குற்றப்பிரிவு துவங்கப்படும் அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
ADDED : மார் 27, 2025 03:51 AM
சட்டசபை கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்;
அனிபால் கென்னடி(தி.மு.க): புதுச்சேரியில் பொருளாதார குற்ற பிரிவு உள்ளதா?
அமைச்சர் நமச்சிவாயம்: பொருளாதார குற்ற பிரிவினை உருவாக்குவதற்கான அறிவிப்பை கடந்த 2015ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இருப்பினும் கட்டடம், பதவிகள் உருவாக்கப்படாததால் இயங்கவில்லை. சி.பி.சி.ஐ.டி., போலீசார் தான் பொருளாதார குற்றங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை 45 பொருளாதார குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 13 வழக்குகளில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 32 வழக்குகள் விசாரணையில் உள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சிவா: புதுச்சேரியில் போலி பத்திரங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. கவர்னர் மாளிகைக்கு போலி பத்திரம் தயார் செய்து கொடுங்கள் என்று கேட்டால், முப்பாட்டன்கள் பெயரையெல்லாம் கண்டுபிடித்து கவர்னர் மாளிகையை பத்திர பதிவினை செய்துவிடுவார்கள். பத்திர பதிவு அலுவலகங்களில் ஆவணத்தை திருடி செல்கின்றனர்.
இதேபோல் சீட்டு மோசடிகளும் புதுச்சேரியில் அதிகரித்துள்ளது. நானே ரூ.16 கோடி சீட் மோசடி பிரச்னை தீர்க்க முயன்றேன்.
வைத்தியநாதன்(காங்.,): சீட்டு பிடித்து ஏமாற்றிவிட்டு சுதந்திரமாக நடமாடுகின்றனர். அவர்களை ஒன்றுமே செய்யமுடியவில்லை.
அமைச்சர் நமச்சிவாயம்: காவல் துறையில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவலர்கள் தேர்வு செய்யப்பட்டதும் பொருளாதார குற்ற பிரிவு தனி போலீஸ் ஸ்டேஷனாக இயங்கும்.