/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வெண்கலம் வென்ற வீரர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து வெண்கலம் வென்ற வீரர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து
வெண்கலம் வென்ற வீரர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து
வெண்கலம் வென்ற வீரர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து
வெண்கலம் வென்ற வீரர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து
ADDED : ஜூலை 04, 2025 02:31 AM

புதுச்சேரி: தேசிய அளவிலான 10வது சீனியர் மினி கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற வீரர்கள், அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் தேசிய அளவிலான 10வது சீனியர் மினி கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன.இப்போட்டியில், புதுச்சேரி மினிகோல்ப்அசோசியேஷன் சார்பில், வீரர், வீராங்கனைகள் 12 பேர் கலந்து கொண்டனர். இதில், புதுச்சேரி வீரர்கள் மூன்றாம் இடம் பிடித்து, வெண்கல பதக்கம் வென்றனர்.
அவர்கள், பாண்டிச்சேரி மினி கோல்ப் அசோசியேஷன் செயலாளர் எழில்ராஜன் மற்றும் தலைவர் ஜான் அம்புரோஸ் தலைமையில், அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.பதக்கம் வென்ற அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் அமைச்சர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.