/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 74 எஸ்.ஐ., பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் அமைச்சர் நமச்சிவாயம் தகவல் 74 எஸ்.ஐ., பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
74 எஸ்.ஐ., பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
74 எஸ்.ஐ., பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
74 எஸ்.ஐ., பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
ADDED : ஜூலை 02, 2025 02:05 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் நடந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டதன் முதலாமாண்டு நிறைவு விழாவில், அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:
காவல்துறையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து குற்றங்கள் இல்லாத புதுச்சேரியை உருவாக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்.
புதிய குற்றவியல் சட்டங்கள், சிறப்பான முறையில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவின்படி போலீசில் முதல் தகவல் அறிக்கை தமிழில் பதிவு செய்யப்படுகிறது.
காவல்துறையில்புதிதாக 74 சப் இன்ஸ்பெக்டர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதோடு கடலோர ஊர்க்காவல் படையினர் 200 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
பல ஆண்டாக இன்ஸ்பெக்டராக உள்ளவர்கள் பதவி உயர்வு இன்றி ஓய்வுபெறும் நிலை உள்ளது. அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்காக, மத்திய அரசுக்கு கோப்புகள் அனுப்பப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. புதிய சட்டங்கள் குறித்து 15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வும் நடத்தி வருகிறோம் என்றார்.