/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தலைமை ஆசிரியருக்கு எம்.எல்.ஏ., வாழ்த்து தலைமை ஆசிரியருக்கு எம்.எல்.ஏ., வாழ்த்து
தலைமை ஆசிரியருக்கு எம்.எல்.ஏ., வாழ்த்து
தலைமை ஆசிரியருக்கு எம்.எல்.ஏ., வாழ்த்து
தலைமை ஆசிரியருக்கு எம்.எல்.ஏ., வாழ்த்து
ADDED : செப் 10, 2025 08:26 AM

புதுச்சேரி: மாநில கல்வி அமைச்சர் விருது பெற்ற முத்தி யால்பேட்டை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகனுக்கு பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., சால்வை அணிவித்து, பாராட்டினார்.
முத்தியால்பேட்டை அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகனுக்கு, மாநில கல்வி அமைச்சர் விருது, காமராஜர் மணி மண்டபத்தில் நடந்த ஆசிரியர் தின விழாவில் வழங்கப்பட்டது.
இதையொட்டி, பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில், முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., பிரகாஷ்குமார் கலந்து கொண்டு, விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.