/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாலை அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு சாலை அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
சாலை அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
சாலை அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
சாலை அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : செப் 24, 2025 05:59 AM

வில்லியனுார் : அரவிந்த் வின் சிட்டி மற்றும் ஆகாஷ் நகர் பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணியை சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
வில்லியனுார் தொகுதி, உத்திரவாகினி பேட் அருகே உள்ள அரவிந்த் வின் சிட்டி மற்றும் ஆகாஷ் நகர் ஆகிய பகுதியில் ரூ. 45 லட்சம் திட்ட மதிப்பில், எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.
சிவா எம்.எல்.ஏ., பங்கேற்று, பூமி பூஜை செய்து தார் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், இளநிலைப் பொறியாளர் சத்தியநாராயணா, அரவிந்த் வின் சிட்டி, ஆகாஷ் நகர் முக்கியஸ்தர்கள் மோகன், கருணாநிதி, ஆரோக்கியதாஸ், கோவிந்தசாமி, தண்டபாணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.