Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எஸ்.ஐ., தேர்விற்கு 3 ஆண்டு வயது தளர்வு வைத்தியநாதன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

எஸ்.ஐ., தேர்விற்கு 3 ஆண்டு வயது தளர்வு வைத்தியநாதன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

எஸ்.ஐ., தேர்விற்கு 3 ஆண்டு வயது தளர்வு வைத்தியநாதன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

எஸ்.ஐ., தேர்விற்கு 3 ஆண்டு வயது தளர்வு வைத்தியநாதன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

ADDED : மார் 27, 2025 03:46 AM


Google News
புதுச்சேரி: சட்டசபை பூஜ்ய நேரத்தில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பேசியதாவது:

தேசிய சுகாதார இயக்ககத்தில் 2 ஆண்டு முதல் 20 ஆண்டுகள் வரை செவிலியர்கள் உள்பட பலர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு எந்த பணி பாதுகாப்பும் இல்லை. சம ஊதியம் இல்லை. செவிலியர்கள் 80 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்கும்போது அதே வேலையை செய்யும் தேசிய சுகாதார இயக்க செவிலியர்கள் வெறும் 15 ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் பெறுகின்றனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் கூட செட்டில்மெண்ட்டுடன் செல்கின்றனர்.

ஆனால் இவர்களுக்கு அரசு எந்த செட்டில்மெண்டும் செய்வதில்லை. இவர்களுக்கு பணி பாதுகாப்போடு, சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும். இதேபோல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் யோகா ஆசிரியர்கள் வெறும் 7,500 ரூபாய் மட்டுமே சம்பளம் தரப்படுகிறது.

இதனை 10 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும். அரசு சட்டக்கல்லுாரியில் பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. அங்குள்ள 30 பேராசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். சப் இன்ஸ்பெக்டர் பணியிடத்திற்கு 3 ஆண்டு வயது தளர்வு அளிக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us