/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றம் தி.மு.க.,வினர் சாலை மறியல் போராட்டம் சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றம் தி.மு.க.,வினர் சாலை மறியல் போராட்டம்
சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றம் தி.மு.க.,வினர் சாலை மறியல் போராட்டம்
சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றம் தி.மு.க.,வினர் சாலை மறியல் போராட்டம்
சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றம் தி.மு.க.,வினர் சாலை மறியல் போராட்டம்
ADDED : செப் 19, 2025 03:07 AM

பாகூர்: சட்டசபையில் இருந்து தி.மு.க., எம்.எல்.ஏ., க்கள் வெளியேற்றப்பட்டதை கண்டித்து, கன்னியக்கோவிலில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி சட்டசபை நேற்று காலை கூடியது. இதில், எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் தி.மு.க., - காங்., எம்.எல்.ஏ.க்கள், புதுச்சேரியின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க சட்டசபையை குறைந்த பட்சம் 10 நாட்களாவது நடத்த வேண்டும் என்றனர்.
இது தொடர்பாக, தி.மு.க., - காங்., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் சபாநாயகர் செல்வத்திற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, சபாநாயகர் உத்தரவின் பேரில், சட்டசபை காவலர்கள், தி.மு.க., - காங்., உறுப்பினர்களை குண்டு கட்டாக துாக்கி வெளியேற்றினர்.
இதனை கண்டித்து, தி.மு.க.,வினர், நேற்று மதியம் புதுச்சேரி - கடலுார் சாலை கன்னியக்கோவிலில் சந்திப்பில் மதியம் 12:25 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு, தி.மு.க., விவசாய தொழிலாளர்கள் அணி மாநில அமைப்பாளர் தவமுருகன் தலைமை தாங்கினார். சட்டசபை கூட்டத்தில் இருந்து தி.மு.க., காங்., எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றியதை கண்டித்து, அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி, சாலை மறியலை 12:40 மணியளவில் கைவிட செய்தனர். இப்போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.