/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரியில் களைகட்டிய சக்தி சங்கமம் மாநாடு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் பங்கேற்புபுதுச்சேரியில் களைகட்டிய சக்தி சங்கமம் மாநாடு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் பங்கேற்பு
புதுச்சேரியில் களைகட்டிய சக்தி சங்கமம் மாநாடு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் பங்கேற்பு
புதுச்சேரியில் களைகட்டிய சக்தி சங்கமம் மாநாடு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் பங்கேற்பு
புதுச்சேரியில் களைகட்டிய சக்தி சங்கமம் மாநாடு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் பங்கேற்பு
ADDED : பிப் 11, 2024 02:03 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் களைகட்டிய சக்தி சங்கமம் மகளிர் மாநாட்டில் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி, அய்யங்குட்டிப்பாளையம் விவேகானந்தா பள்ளி வளாகத்தில் சமர்ப்பணம் சேவை மையம் சார்பில், சக்தி சங்கமம் மகளிர் மாநாடு நேற்று நடந்தது. எழுத்தாளர் கலா விசு முன்னிலை வகித்தார்.
சக்தி சங்கமம் மகளிர் மாநாட்டில் முதல் அமர்வாக 'பாரதிய பார்வையில் பெண்கள்' எனும் தலைப்பில் சுவாமினி சுத்த வித்யானந்த சரஸ்வதி மாதாஜி ஆசியுரை வழங்கினார்.
கோல்டு மரைன் பயோடெக் இயக்குனர் பவானி ரவிக்குமார் 'பெண்கள் சந்திக்கும் சவால்களும் அதை தீர்க்கும் வழிமுறைகளும்' எனும் தலைப்பில் பேசினார்.மூன்றாம் அமர்வில் 'பாரத வளர்ச்சியில் பெண்களின் பங்கு' என்ற தலைப்பில் ஆன்மிக இலக்கிய சொற்பொழிவாளர் புதுகை பாரதி பேசினார். இணை அமர்வில் சுவாமினி யத்தீஸ்வரி ஆனந்த பிரேம பிரியா அம்பா உரையாற்றி, பெண்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.
ராஷ்ட்ர சேவிகா சமிதி கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி தென்பாரத செயலாளர் கீதா ரவிச்சந்திரன் நிறைவுரையாற்றினார்.
மாநாட்டினையொட்டி சிறப்பு கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் பங்கேற்று மகளிர் பிரச்னைகள் தொடர்பாக விவாதித்தனர்.
நிகழ்ச்சியில் வரவேற்பு குழு துணை தலைவர்கள் சுப்ரியா, ஸ்வாதிகா, பொது செயலாளர் ஜெயலட்சுமி, செயலாளர்கள் லலிதா, புஷ்பா, பூங்குழலி, பிரபாதேவி, ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி, இணை ஒருங்கிணைப்பாளர்கள் யமுனாராணி, மாலதி மற்றும் வரவேற்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.