Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 100 அடி சாலை ரயில்வே மேம்பால சீரமைப்பு பணி படுமந்தம் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அதிருப்தி

100 அடி சாலை ரயில்வே மேம்பால சீரமைப்பு பணி படுமந்தம் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அதிருப்தி

100 அடி சாலை ரயில்வே மேம்பால சீரமைப்பு பணி படுமந்தம் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அதிருப்தி

100 அடி சாலை ரயில்வே மேம்பால சீரமைப்பு பணி படுமந்தம் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அதிருப்தி

ADDED : மே 23, 2025 11:59 PM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த 100 அடி சாலை ரயில்வே மேம்பாலம் மறுசீரமைப்பு பணி மந்தகதியில் நடந்து வருவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி 100 ரோடி ரயில்வே கிராசிங்கில் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி 1.20 கி.மீ., நீளத்திற்கு மேம்பாலம் திறக்கப்பட்டது. பல கோடி ரூபாய் செலவில் முதல் முறையாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் பெருமை கொள்ளப்பட்ட நுாறடி ரயில்வே பாலத்தில் யார் கண்ணுபட்டதோ தெரியவில்லை. பல ஆண்டுகளாக மேம்பால சாலையில் அடிக்கடி பள்ளம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளை மிரட்டி வருகிறது.

பாலத்தின் மேல் சிமெண்ட் சாலை ஜால்லிகள் அடிக்கடி பெயர்ந்து இரும்பு கம்பிகள் ஆபத்தாக வெளியே தெரிவதும், தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் ஒப்புக்கு பேட்ச் ஒர்க் செய்வதும் பேஷனாகி விட்டது.

இந்நிலையில், ரயில்வே பாலத்தின் பக்க சுவர் பகுதி தற்போது விரிவாக்கமடைந்து பாலத்தின் கீழ் மணல்கொட்டி அடுத்த பீதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் அச்சத்தை தொடர்ந்து இப்பாலத்தினை பலப்படுத்தும் பணி கடந்த 8ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதற்காக போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.

பாலத்தின் கிழக்கு பகுதி ஆர்.டி.ஓ., அலுவலகம் பக்கம் முழுதுமாக மூடப்பட்டுள்ளது. இப்பகுதியில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இதனால், பாலத்தின் ஒருபக்கம் மட்டும் வாகனங்கள் சென்று வருகின்றன.

100 அடி ரோடு ரயில்வே மேம்பாலம் நகரின் உச்சக்கட்ட போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளது. எனவே, ரயில்வே பாலத்தினை பலப்படுத்தும் பணியை விரைவு படுத்தி முடிக்க வேண்டியது முக்கியம். அதிகாரிகள் அருகிலேயே இருந்து இந்த பணியை மேற்பார்வை செய்ய வேண்டும்.

இது சாமானிய குப்பன் சுப்பனுக்கு கூட தெரியும். ஆனால், அதிகாரிகளுக்கு மட்டும் ஏனோ தெரியவில்லை. இந்த ரயில்வே மேம்பால மறுசீரமைப்பு பணி செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டு மந்தகதியில் செய்து வருகின்றனர்.

அதுவும் குறைந்த ஆட்களை கொண்டு ஆமைவேகத்தில் மறுசீரமைப்பு பணிகளை உருட்டி வருகின்றனர். இதுவரை 30 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது.

எஞ்சியுள்ள 70 சதவீத பணிகளை, இரண்டரை மாதத்தில் முடித்துவிடுவோம் என அதிகாரிகள் தெரிவிக்க, அது வரை எங்களின் நிலைமை என்ன ஆகும் என, போக்குவரத்து நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள் கடும் எரிச்சலடைந்து வருகின்றனர். ஏண்டா இந்த பக்கம் வந்தோம் என, நொந்தபடி செல்கின்றனர்.

போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டிய சீரமைப்பு பணியை, சாவகாசமாக நடந்து வருவது பொதுமக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விஷயத்தில் புதுச்சேரி அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கூடுதல் ஆட்கள் நியமித்து விரைவாக பணியை முடிக்க வேண்டும். இல்லையெனில் 100 அடி சாலையில் தினமும் சந்திக்கும் இந்த நெரிசல், ஆளும் கட்சிக்கு அதிருப்தி ஓட்டுகளாக தான் மாறும்.

என்ன பிரச்னை?

பிரெஞ்சியர் ஆட்சிக்காலத்தில் சுண்ணாம்பாறு காலத்தில் கட்டப்பட்ட பாலம் இன்னும் கம்பீரமாக நிற்க, கடந்த 2017ல் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் பல்லிளித்து உள்ளது வியப்பினை ஏற்படுத்தியுள்ளது. பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகையில், 'ரயில்வே மேம்பாலம் வலுவாகவே உள்ளது. பக்க சுவர் சற்றே விரிவாக்கமடைந்துள்ளது. நாம் வீடு கட்டிய பிறகு சில ஆண்டுகளில் சுவர்களில் விரிசல், சற்று விழுந்து இருக்கும். அந்த பகுதியில் மணல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் இது ஏற்படும்.அதுபோன்று தான் ரயில்வே மேம்பாலத்திற்கு நடந்துள்ளது. வரலாறு காணாத மழை காரணமாக தண்ணீர் கசிவு ஏற்பட்டு பாலத்தில் இந்த தளர்வு ஏற்பட்டு இருக்கலாம். எனவே நெய்லிங் புராஸ்சஸ் பணியை துவங்கியுள்ளோம். மணல் தளர்ந்துள்ள பகுதிகளில் ரசாயணம் கலந்த கான்கிரீட் கலவை கொட்டி பலப்படுத்தி வருகிறோம். 70 மீட்டர் நீளத்திற்கு பணி மேற்கொள்ள உள்ளோம். இப்பணி இரண்டரை மாதத்தில் முடியும்' என்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us