Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி கடலில் குதித்து எம்.பி.பி.எஸ்., மாணவர் தற்கொலை

புதுச்சேரி கடலில் குதித்து எம்.பி.பி.எஸ்., மாணவர் தற்கொலை

புதுச்சேரி கடலில் குதித்து எம்.பி.பி.எஸ்., மாணவர் தற்கொலை

புதுச்சேரி கடலில் குதித்து எம்.பி.பி.எஸ்., மாணவர் தற்கொலை

ADDED : ஜன 30, 2024 06:43 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு மாணவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி கடற்கரையில் அம்பேத்கர் மணிமண்டபம் எதிரே நேற்று காலை 10:00 மணிக்கு, வாலிபர் உடல் கரை ஒதுங்கியது. தகவலறிந்த பெரியக்கடை போலீசார் விரைந்து சென்று, வாலிபர் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

அதில் இறந்தவர், கடலுார் மஞ்சக்குப்பம், ஆல்பேட்டை காமராஜர் நகரைச் சேர்ந்த கவுதமன் மகன் நிதிஷ்,23; என்பதும், புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பத்தில் உள்ள மகாத்மாகாந்தி மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு படித்து வருவது தெரிய வந்தது. இது தொடர்பாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நிதிஷ்க்கு நேற்று எம்.பி.பி.எஸ்., தேர்வு நடந்தது. இதற்காக வழக்கம்போல் காலை 7:45 மணிக்கு வீட்டில் இருந்து கல்லுாரிக்கு புறப்பட்டு சென்றவர் கடற்கரையில் பிணமாக கரை ஒதுங்கியுள்ளார். அவரது கல்லுாரி பை, அம்பேத்கர் மணிமண்டபம் அருகே உள்ள உணவகம் இருக்கைக்கு பின்புறம் கிடந்தது.

நிதிஷ், தேர்வு பயத்தில் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us