Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ துணை ஒப்பந்த சேவையை 18 சதவீதமாக அதிகரித்துள்ளது சிக்கலை ஏற்படுத்தும் எம்.எஸ்.எம்.இ., சங்கத்தினர் மனு

துணை ஒப்பந்த சேவையை 18 சதவீதமாக அதிகரித்துள்ளது சிக்கலை ஏற்படுத்தும் எம்.எஸ்.எம்.இ., சங்கத்தினர் மனு

துணை ஒப்பந்த சேவையை 18 சதவீதமாக அதிகரித்துள்ளது சிக்கலை ஏற்படுத்தும் எம்.எஸ்.எம்.இ., சங்கத்தினர் மனு

துணை ஒப்பந்த சேவையை 18 சதவீதமாக அதிகரித்துள்ளது சிக்கலை ஏற்படுத்தும் எம்.எஸ்.எம்.இ., சங்கத்தினர் மனு

ADDED : செப் 26, 2025 04:46 AM


Google News
புதுச்சேரி: உற்பத்தி துறையில் துணை ஒப்பந்த சேவையை 18 சதவீதமாக அதிகரித்துள்ளது சிக்கலை ஏற்படுத்தும் என, புதுச்சேரி குறு சிறு நடுத்தர தொழில் முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் அருள்செல்வம் தலைமையில் நிர்வாகிகள், ஜி.எஸ்.டி., கமிஷனருக்கு அளித்த மனு விபரம்;

நடுத்தர, சிறு, குறு தொழில்களுகளுக்கான வரி கட்டமைப்பை இரண்டு அடுக்குகளின் கீழ் எளிதாக்கியது பாராட்டுக்குரியது.அத்தியாவசிய பொருட்களுக்கு 5 சதவீதம், நிலையான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 18 சதவீதம் விதித்துள்ளது சிறந்த சீர்திருத்தமாகும்.

இது எங்கள் வரி கட்டமைப்பை எளிதாக்கியுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கும் அடித்தளத்தை வலுப்படுத்துகிறது.

எங்கள் கோரிக்கையை பரிசீலித்து, இரு சக்கர வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி., விகிதத்தை குறைத்து பரிந்துரைத்ததற்காக ஆணையருக்கு மனமார்ந்த நன்றி.

ஜி.எஸ்.டி.,யின் கீழ் எம்.எஸ்.எம்.இ., தொழில்களுக்கான மிகவும் தொடர்ச்சியான சவால்களில் ஒன்று உள்ளீட்டு வரிக் கடன் பணத்தை திரும்பப் பெறுவது. இந்த தாமதமும் தடுக்கப்பட்டுள்ளது.இருப்பினும் சிக்கல்கள் இன்னும் தொடர்கிறது. குறிப்பாக உற்பத்தித் துறையில் துணை ஒப்பந்த சேவைகளில் நீண்டகாலக் கோரிக்கைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. வேலை சேவைக்கான தொழிலாளர் கட்டணத்தின் மீதான முந்தைய 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய நீண்ட கால கோரிக்கை.ஆனால் அதற்கு பதிலாக, அரசாங்கம் அதை 18 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

இது வேலை, வேலையைச் சார்ந்திருக்கும் குறு மற்றும் சிறிய அளவிலான தொழில்களுக்கு கடுமையான சவால்களை ஏற்படுத்தும். 18 சதவீத வரி விகிதத்தைத் தொடர்வது நீண்ட காலத்திற்கு சிறு தொழில்கள் பெரிய சிக்கலை சந்திக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us