Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரிக்கு கூடுதலாக 105 மெகாவாட் மின்சாரம் நமச்சிவாயம் கோரிக்கை: மத்திய அமைச்சர் உறுதி

புதுச்சேரிக்கு கூடுதலாக 105 மெகாவாட் மின்சாரம் நமச்சிவாயம் கோரிக்கை: மத்திய அமைச்சர் உறுதி

புதுச்சேரிக்கு கூடுதலாக 105 மெகாவாட் மின்சாரம் நமச்சிவாயம் கோரிக்கை: மத்திய அமைச்சர் உறுதி

புதுச்சேரிக்கு கூடுதலாக 105 மெகாவாட் மின்சாரம் நமச்சிவாயம் கோரிக்கை: மத்திய அமைச்சர் உறுதி

ADDED : மே 24, 2025 03:23 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தென்னிந்திய மாநிலங்களின் மின்துறை அமைச்சர்கள் மாநாடு நேற்று நடந்தது.

மாநாட்டிற்கு, மத்திய புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் ஸ்ரீபாத் யெசோ நாயக், மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் தலைமை தாங்கினர்.

கூட்டத்தில், புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை சார்ந்த மின்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இதில், புதுச்சேரி சார்பில் மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று, புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் உள்ள மின்சார தேவைகள், மத்திய அரசின் திட்டங்கள் எவ்வாறு மாநிலத்தில் செயல்படுத்தப்படுகிறது, நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார். மேலும், புதுச்சேரியில் மின்துறையை மேம்படுத்த கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து, புதுச்சேரிக்கு கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டுமென மத்திய மின்துறை அமைச்சர் மனோகர் லாலை, அமைச்சர் நமச்சிவாயம் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

அதில், புதுச்சேரிக்கு தற்போது மத்திய அரசு மூலம் என்.எல்.சி., ராமகுண்டம் ஆகிய அனல்மின் நிலையங்களில் இருந்தும், கூடங்குளம் அணுமின் நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் 540 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படுகிறது.

அடுத்த 10 ஆண்டுகளில், மக்கள் தொகை பெருக்கம், தொழிற்சாலை, வியாபார நிறுவனங்கள் துவக்கம் போன்ற காரணங்களால், புதுச்சேரிக்கு கூடுதலாக 300 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதற்கு, முதற்கட்டமாக, புதுச்சேரிக்கு 105 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது.

மனுவை பெற்று கொண்ட மத்திய அமைச்சர், விரைந்து புதுச்சேரிக்கு கூடுதல் மெகாவாட் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததுடன், உடனடியாக மத்திய மின்துறை செயலரை அழைத்து புதுச்சேரிக்கு தேவையான கூடுதல் மின்சாரத்தை வழங்க உத்தரவிட்டதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us