ADDED : செப் 20, 2025 07:06 AM
பாகூர் : பிள்ளையார்குப்பத்தில் கவி வாணிதாசன் சாலையோர வியாபாரிகள் சங்க பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.
விழாவில், ஐ.என்.டி.யு.சி., மாநில தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கந்தசாமி சங்க பெயர் பலகையை திறந்து வைத்தார். செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஐ.என்.டி.யு.சி., சங்க கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில், பாகூர் வட்டார காங்., தலைவர் கோபு, ஐ.என்.டி.யு.சி., நிர்வாகிகள் ஞானசேகரன், முத்துராமன், தமிழ்ச்செல்வன், ஜான்சன், பாண்டியன், அந்தோணி ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சங்க நிர்வாகிகள் குமார், ராகவ எல்லப்பன், வழக்கறிஞர் பக்கிரி, லெனின் உட்பட பலர் பங்கேற்றனர்.