ADDED : மே 24, 2025 03:22 AM

புதுச்சேரி:ராணுவ வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், பா.ஜ., சார்பில் தேசிய கொடி ஏந்தி ஊர்வலம் சென்றனர்.
இந்திய ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி, அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், உருளையன்பேட்டை தொகுதி பா.ஜ., பொறுப்பாளர் பிரபுதாஸ் தலைமையில், ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தில் சபாநாயகர் செல்வம், செல்வகணபதி எம்.பி., உட்பட கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் நெல்லித்தோப்பு சிக்னலில் இருந்து புறப்பட்டு, மறைமலை அடிகள் சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை வழியாக சென்று, பாலாஜி தியேட்டர் அருகில் நிறைவு பெற்றது.