/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பல்கலை., பேராசிரியருக்கு தேசிய ஆசிரியர் விருது பல்கலை., பேராசிரியருக்கு தேசிய ஆசிரியர் விருது
பல்கலை., பேராசிரியருக்கு தேசிய ஆசிரியர் விருது
பல்கலை., பேராசிரியருக்கு தேசிய ஆசிரியர் விருது
பல்கலை., பேராசிரியருக்கு தேசிய ஆசிரியர் விருது
ADDED : செப் 12, 2025 03:53 AM

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை பேராசிரியர் சிவ சத்யா கல்வி, ஆராய்ச்சி மற்றும் மாணவர் நலனுக்காக'தேசிய ஆசிரியர் விருது' பெற்றார்.
உயர் கல்வியில் 25 ஆண்டுகளுக்கும் அதிகமாக புதிய பாடங்களை அறிமுகப்படுத்துதல், பாடத்திட்ட வடிவமைப்பு, மாணவர் வழிகாட்டுதல் மற்றும் பல்வேறு கல்விக் குழுக்களில் பங்கு வகித்தல் ஆகிய துறைகளில் அவரின் பங்களிப்புக்கான அங்கீகாரமாக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
விருது பெற்ற பேராசிரியர் சிவ சத்யாவை, பல்கலைக்கழக துணைவேந்தர் பிரகாஷ் பாபு பாராட்டி கூறுகையில், கல்வி, ஆராய்ச்சி மற்றும் மாணவர் நலனில் கொண்டுள்ள விரிவான பங்களிப்பு, பல்கலைக் கழகத்தின் அகாதமிக் மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சிக்கு ஒரு சிறந்த ஊக்கமாக உள்ளதாகவும், மாணவர்களுக்கு தனிப்பட்ட வழிகாட்டல் மற்றும் தொழில்வாய்ப்பு ஆதரவு, மாணவர் மையக் கல்வி அணுகுமுறையின் பிரதிபலிப்பாக உள்ளார். அவரை, ஜனாதிபதி, பிரதமர் பாராட்டியது பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது' என்றார்.
பேராசிரியர் சிவ சத்யா பயோ -இன்ஸ்பைர்டு கம்ப்யூட்டிங், ஸ்பேஷியோ-டெம்போரல் மைனிங் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர். தற்போது சுகாதாரத் துறைக்கான செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளில் ஆராய்ச்சி செய்து வருகிறார்.மலேசியாவின் ஐ.என்.டி.ஐ., சர்வதேச பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உறுப்பினராகவும், தேசிய கல்விக் கொள்கை செயல்படுத்தும் குழுவின் உறுப்பினராகவும், ஏ.ஐ.சி.டி.இ., நோடல் அதிகாரியாகவும் உள்ளார்.
சமூக நலனுக்கான தொழில்நுட்பப் பங்களிப்புகளில், பெண்கள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட 'மித்ரா' ஆப் சிறப்பிடம் பெறுகிறது. இதற்காக 'நாரி சக்தி புரஸ்கார்' விருது பெற்றார்.