/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ என்.ஆர்.காங்., மகளிரணி அறிமுக கூட்டம் என்.ஆர்.காங்., மகளிரணி அறிமுக கூட்டம்
என்.ஆர்.காங்., மகளிரணி அறிமுக கூட்டம்
என்.ஆர்.காங்., மகளிரணி அறிமுக கூட்டம்
என்.ஆர்.காங்., மகளிரணி அறிமுக கூட்டம்
ADDED : மே 11, 2025 04:00 AM

புதுச்சேரி: என்.ஆர்., காங்., மகளிரணி அறிமுகம் கூட்டம் மற்றும் சட்டசபை தேர்தலையொட்டி, ஆலோசனைக் கூட்டம் கட்சிஅலுவலகத்தில் நடந்தது.
புதுச்சேரியில், வரும் 2026ம் ஆண்டு சட்டசபை நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், என்.ஆர்.காங்., கட்சியைபலப்படுத்த, இளைஞரணி, மகளிரணிகளுக்கு மாநில மற்றும் தொகுதி வாரியாக நிர்வாகிகளை முதல்வர் ரங்கசாமி நியமித்து வருகிறார்.
இந்நிலையில், மகளிரணி அறிமுகம் மற்றும் தேர்தல் ஆலோசனைக் கூட்டம், இ.சி.ஆர்., சாலை, லாஸ்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடந்தது. மகளிரணி தலைவி ரேவதி பற்குணம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் லட்சுமிநாராயணன் பங்கேற்றார்.
கூட்டத்தில், மாநில செயலாளர் ஜெயபால், வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், என்.ஆர்.கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும். அதற்காக மகளிரணியினர், முதல்வர் ரங்கசாமி அறிவித்த நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்து கூற வேண்டும்' என்றார்.
தொடர்ந்து, ரமேஷ் எம்.எல்.ஏ., சட்டசபை தேர்தலையொட்டி, அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். மகளிரணி நிர்வாகிகள் அரசின் சாதனைகளை, தெருமுனை பிரசாரம் செய்ய வேண்டும்' என்றார்.
சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ., மகளிரணியினர் என்.ஆர்.காங்., கட்சிக்கு வாக்களிக்கும் வகையில், வீடு வீடாக சென்று முதல்வரின் சாதனைகளை எடுத்து கூற வேண்டும்' என்றார். கூட்டத்தில், கட்சி தேர்தல் நடத்தும் அதிகாரி பக்தவச்சலம், பொருளாளர் வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.