Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பெயிண்டர் தற்கொலை: போலீசார் விசாரணை

பெயிண்டர் தற்கொலை: போலீசார் விசாரணை

பெயிண்டர் தற்கொலை: போலீசார் விசாரணை

பெயிண்டர் தற்கொலை: போலீசார் விசாரணை

ADDED : ஜன 14, 2024 04:22 AM


Google News
பாகூர் : பெயிண்டர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிருமாம்பாக்கம் அடுத்த ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன் 47; பெயிண்டர். இவரது மனைவி சந்திரா, 40. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மூட்டு வலியால் அவதிப்பட்ட கருணாகரன், கடந்த 10ம் தேதி இரவு வெளியே சென்றார். வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் அவரை தேடி வந்தனர்.

நேற்று காலை கிருமாம்பாக்கம் வடக்கு ஓடையில் உள்ள வேப்ப மரத்தில் துாக்கில் இறந்த நிலையில் தொங்கினார்.

தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் லுார்துநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us