ADDED : செப் 04, 2025 01:18 AM
பாகூர் : பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டது குறித்து பாகூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாகூர் அடுத்த குருவிநத்தம், பெரியார் நகர், புதுதெருவை சேர்ந்தவர் வீரமுத்து 47; பெயிண்டர். இவரது மனைவி சாவித்திரி, 39. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மது போதையில் வீட்டிற்கு வந்த வீரமுத்து, மனைவியிடம் தகராறு செய்தார். இதனால், அவரது மனைவி சாவித்திரி, தனது மகளுடன் அறைக்குள் சென்று விட்டார். பின், திரும்பி வந்து பார்த்தபோது, வீரமுத்து சமையலறையில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. வீரமுத்துவின் தம்பி பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.