ADDED : ஜூன் 20, 2025 02:24 AM
காரைக்கால் : காரைக்கால், கோட்டுச்சேரி, கீழக்காசாக்குடி, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்; லோடுமேன். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். மூன்றாவது மகன் விஜயகுமார், 18, இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இரவு நேரத்தில் மொபைல் போனில் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இதை பெற்றோர் கண்டித்தனர். இதனால் வேதனை அடைந்த விஜயகுமார் அருகே சுடுகாட்டில் உள்ள வேப்ப மரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.