Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காவலர் நலவாழ்வு கழக இடம் மீட்டு தரக் கோரி கலெக்டரிடம் மனு

காவலர் நலவாழ்வு கழக இடம் மீட்டு தரக் கோரி கலெக்டரிடம் மனு

காவலர் நலவாழ்வு கழக இடம் மீட்டு தரக் கோரி கலெக்டரிடம் மனு

காவலர் நலவாழ்வு கழக இடம் மீட்டு தரக் கோரி கலெக்டரிடம் மனு

ADDED : ஜூன் 18, 2025 04:49 AM


Google News
புதுச்சேரி: புதுச்சேரி காவலர் நலவாழ்வு கழகத்திற்கு சொந்தமான இடத்தை மீட்டு தர கோரி, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, புதுச்சேரி காவலர் நலவாழ்வு கழக சார்பில், கலெக்டர் குலோத்துங்கனிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு;

புதுச்சேரி மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகில், புதுச்சேரி காவலர் நலவாழ்வு கழகத்திற்கு சொந்தமான 45 ஆயிரத்து 209 சதுரடியில் இடம் இருந்தது. அதில், 23 ஆயிரத்து 681 சதுரடி இடத்தை கடந்த 2005ம் ஆண்டு, புதுச்சேரி அரசு, 35.52 லட்சம் ரூபாயை, கழத்திற்கு கொடுத்து கையகப்படுத்தியது.மீதும் இருக்கும் 21 ஆயிரத்து 528 சதுரடி இடத்தை, தற்போது உள்ள மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன், பொதுப்பணித்துறையினர் கட்டியுள்ள பம்பு ஹவுஸ், மேலும், குடியிருப்பு வீடுகள், சாலைகள் என ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அந்த இடத்தை மீட்டு தர கோரி, டி.ஜி.பி.,யிடம் கழகத்தின் சார்பில் தொடர்ந்து மனு அளித்து வருகிறோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது. இந்நிலையில், கழகத்தின் சார்பில், தலைவர் சர்குணன் தலைமையில், இணை செயலாளர் ஞானபிரகாசம் உள்ளிட்ட நிர்வாகிகள், இடத்தை மீட்டு தர கோரி நேற்று கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us