ADDED : செப் 16, 2025 02:48 AM
புதுச்சேரி: புதுச்சேரி, லெனின் வீதியில், இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
போட்டோ, வீடியோ கிராபி பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. 19ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். பயிற்சியில் சேர, 8ம் வகுப்பு படித்த, 18 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணபிக்கலாம். 31 நாட்கள் பயிற்சியில் உணவு இலவசம்.
விண்ணப்பத்துடன், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் போட்டோ ஆகியவற்றை இணைந்து அனுப்பவும். பயிற்சி 22ம் தேதி துவங்குகிறது. மேலும், 8870497520, 0413 --2246500 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.