/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தீயணைப்புத்துறை வீரர்களுக்கான உடல் திறன் தேர்வு 23ல் துவங்குகிறதுதீயணைப்புத்துறை வீரர்களுக்கான உடல் திறன் தேர்வு 23ல் துவங்குகிறது
தீயணைப்புத்துறை வீரர்களுக்கான உடல் திறன் தேர்வு 23ல் துவங்குகிறது
தீயணைப்புத்துறை வீரர்களுக்கான உடல் திறன் தேர்வு 23ல் துவங்குகிறது
தீயணைப்புத்துறை வீரர்களுக்கான உடல் திறன் தேர்வு 23ல் துவங்குகிறது
ADDED : பிப் 11, 2024 02:49 AM
புதுச்சேரி: புதுச்சேரியில், தீயணைப்புத்துறை வீரர்கள் பதவிக்கு, வரும், 23ம் தேதி உடல் திறன் தேர்வு துவங்குகிறது.
தீயணைப்புத்துறை செய்திக்குறிப்பு:
புதுச்சேரி தீயணைப்புத்துறையில், நிலைய அதிகாரி - 5; தீயணைப்பு வீரர் - 5; தீயணைப்பு வாகன ஓட்டுநர் - 12; பதவிகளை, நேரடி தேர்வு ஆட்சேர்ப்பு மூலம் நிரப்ப, ஆன்லைன் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இதில், பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
தேர்வர்களுக்கான, உடல் அளவீடுகள், உடல் தர நிலைகள் மற்றும் உடல் திறன் தேர்வு வரும், 23ம் தேதி முதல் புதுச்சேரி, கோரிமேட்டில் அமைந்துள்ள, பி.ஏ.பி., மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதி அட்டையை வரும், 12ம் தேதி காலை 10:00 மணி முதல் https://recruitment.py.gov.in, என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இத்தேர்வில் கலந்து கொள்ள தேர்வர்கள் அனுமதி அட்டை மற்றும் அரசால் வழங்கப்பட்ட, புகைப்பட அடையாள சான்று கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.