Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கொசுவலை போர்த்தி பா.ம.க., போராட்டம்

 கொசுவலை போர்த்தி பா.ம.க., போராட்டம்

 கொசுவலை போர்த்தி பா.ம.க., போராட்டம்

 கொசுவலை போர்த்தி பா.ம.க., போராட்டம்

ADDED : மார் 04, 2026 04:51 AM


Google News
Latest Tamil News
வில்லியனுார்: புதுச்சேரி பா.ம.க., இளைஞரணி சார்பில், வில்லியனுார் சுற்றுவட்டார பகுதியில் கொசுக்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி கொசு வலை போர்த்தி, நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு பா.ம.க., இளைஞர் அணி பொதுச்செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் வில்லியனுார் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து மலேரியா, டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் உடனடியாக கொசு மருந்து தெளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தொடர்ந்து, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பிரபாகரனிடம் கொசுகளை கட்டுப்படுத்த கோரி மனு கொடுத்தனர். அதையடுத்து, கொசு மருந்து தெளிக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் உறுதி அளித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us