ADDED : ஜூன் 10, 2026 04:44 AM
காரைக்கால்: டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால், சேத்துார், பண்டாரவாடை, மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அருமைதாஸ், 39; கார் டிரைவர். இவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், குழந்தை இல்லை.
இந்நிலையில் அருமைதாசின் உறவினரான பெண் ஒருவர் கணவனை வீட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அருமைதாசிற்கும் அப்பெண்ணிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அவரது மனைவி தட்டிக் கோட்டதால், சில நாட்களுக்கு முன், அருமைதாஸ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதனால், அருமைதாசிடம் அப்பெண் பேசுவதை நிறுத்தினார். கடந்த 1ம் தேதி அருமைதாஸ் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். பின், மனமுடைந்த அருமைதாஸ் பெட்ரோல் வாங்கி வந்து அப்பெண்ணின் வீட்டு வாசலில் தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். படுகாயமடைந்த அவர், புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில், நெடுங்காடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
