Dinamalar-Logo
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தனியார் கல்லுாரிகள் கடந்தாண்டை விட கூடுதல் மருத்துவ இடங்களை தர வேண்டும் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தல்

தனியார் கல்லுாரிகள் கடந்தாண்டை விட கூடுதல் மருத்துவ இடங்களை தர வேண்டும் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தல்

ADDED : மே 20, 2025 07:25 AM

Google News
புதுச்சேரி :

50 சதவீத இடம் வேண்டும்

புதுச்சேரி மாணவர், பெற்றோர் சங்க தலைவர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கான, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 65 சதவீதம் வரை அரசு ஒதுக்கீட்டு தரப்படுகின்றன. ஆனால் புதுச்சேரியில் 33 சதவீதம் மட்டுமே பெறப்படுகின்றன. இந்தாண்டு மொத்தமுள்ள 3 கல்லுாரிகளில் 50 சதவீத இடமாக 325 சீட்டுகளை அரசு பெற வேண்டும் என்றனர்.

எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்தது.

நீட் அல்லாத படிப்புகளுக்கான சென்டாக் விண்ணப்பம் ஆன்லைனில் வரவேற்கப்பட்டு வருகின்றன. மாணவ, மாணவிகள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர். இந்தாண்டு மருத்துவ கவுன்சிலிங்கை முன் கூட்டியே நடத்தி முடிக்க புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்பிற்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களை இறுதி செய்தவற்கான பேச்சுவார்த்தை முதல்வர் ரங்கசாமி தலைமையில் சட்டசபை வளாகத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் சுகாதார துறை செயலர் ஜெயந்தகுமார் ரே, இயக்குநர் ரவிச்சந்திரன், சார்பு செயல் சவுமியா, சிறப்பு பணி அதிகாரி சித்ரா, பிம்ஸ், மணக்குளவிநாயகர், வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி, மாகே பல் மருத்துவ கல்லுாரி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கடந்தாண்டு 250 எம்.பி.பி.எஸ்., இடங்களை கொண்ட வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் 91 சீட்டுகள், 150 மருத்துவ இடங்கள் உள்ள மணக்குளவிநாயகர் மருத்துவ கல்லுாரியில் 92 சீட்டுகள், 150 மருத்துவ இடங்களை கொண்ட பிம்ஸ் மருத்துவ கல்லுாரியில் 57 சீட்டுகள் என மொத்தம் 240 சீட்டுகள் அரசு ஒதுக்கீடாக தரப்பட்டது.

எனவே கடந்தாண்டை காட்டிலும் அரசுக்கு கூடுதலாக மருத்துவ சீட்டுகளை அரசு ஒதுக்கீடதாக தர வேண்டும் என முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தினர். இது தொடர்பாக கல்லுாரி சேர்மன்களிடம் கலந்து ஆலோசித்து முடிவுகளை அறிவிப்பதாக தனியார் மருத்துவ கல்லுாரி பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதனால் இந்த கூட்டத்தில் மருத்துவ படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இறுதி செய்யப்படவில்லை.

இம்மாதத்திலேயே மீண்டும் ஒரு முறை தனியார் மருத்துவ கல்லுாரிகளை அழைத்து பேச சுகாதார துறை முடிவு செய்துள்ளது.

50 சதவீத இடம் வேண்டும்

புதுச்சேரி மாணவர், பெற்றோர் சங்க தலைவர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கான, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 65 சதவீதம் வரை அரசு ஒதுக்கீட்டு தரப்படுகின்றன. ஆனால் புதுச்சேரியில் 33 சதவீதம் மட்டுமே பெறப்படுகின்றன. இந்தாண்டு மொத்தமுள்ள 3 கல்லுாரிகளில் 50 சதவீத இடமாக 325 சீட்டுகளை அரசு பெற வேண்டும் என்றனர்.

      Our Apps Available On

      Dinamalar

      Follow us