/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு விதிமுறைகள் வெளியீடு சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு விதிமுறைகள் வெளியீடு
சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு விதிமுறைகள் வெளியீடு
சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு விதிமுறைகள் வெளியீடு
சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு விதிமுறைகள் வெளியீடு
ADDED : ஜூன் 19, 2025 05:08 AM
புதுச்சேரி : புதுச்சேரி காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்பட்டு, 10 ஆண்டுக்கு மேலாகிறது. வயது வரம்பு தளர்வு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்னை காரணமாக சப் இன்ஸ்பெக்டர் தேர்வு தொடர்ந்து தள்ளிப்போனது.
இத்தகைய, சூழலில் புதிதாக சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான நிலை ஆணை கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதலின்பேரில், வெளியிடப்பட்டுள்ளது. துறையின் தலைவர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்பவர்கள் 165 செ.மீ., உயரத்திற்கு குறையாமலும், சாதாரண நிலையில் மார்பளவு 81 செ.மீ, 5 செ.மீ.விரிவடையவும் வேண்டும்.
பெண்கள் குறைந்தபட்சம் 154 செ.மீ., உயரம் இருக்க வேணடும். ஆண்கள் 100 மீட்டர் துாரத்தை 15 விநாடியிலும், 800 மீட்டர் துாரத்தை 2 நிமிடம் 50 விநாடியிலும் கடக்க வேண்டும். 3.80 மீட்டர் நீளம், 1.20 மீட்டர் உயரம் தாண்ட வேண்டும்.
பெண்கள் 100 மீட்டர் துாரத்தை 16.50 விநாடிகளிலும், 200 மீட்டர் துாரத்தை 36 விநாடிகளிலும் ஓடி கடக்க வேண்டும். 3.25 மீட்டர் நீளம், 1.05 மீட்டர் உயரம் தாண்ட வேண்டும்.
இவை அனைத்தும் மின்னணு சாதனம் மூலம் கணக்கிடப்படும். தேர்வுகள் கண்காணிப்பு கேமரா மூலம் பதியப்படும். பொது அறிவு, தற்போதைய நடப்புகள், ஆங்கிலம், கம்ப்யூட்டர் அறிவு தொடர்பாக 100 மதிப்பெண், பாடம் தொடர்பாக 100 மதிப்பெண் என, 2 தாள்கள் தேர்வு நடத்தப்படும்.
இதில், பொது 30 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 25 சதவீதம், ஆதிதிராவிடர், பழங்குடியினர் 20 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என, விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.