/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி சுதந்திர போராட்ட நுால் அறிமுக விழா புதுச்சேரி சுதந்திர போராட்ட நுால் அறிமுக விழா
புதுச்சேரி சுதந்திர போராட்ட நுால் அறிமுக விழா
புதுச்சேரி சுதந்திர போராட்ட நுால் அறிமுக விழா
புதுச்சேரி சுதந்திர போராட்ட நுால் அறிமுக விழா
ADDED : ஜூன் 20, 2025 02:22 AM

புதுச்சேரி : பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் பேராசிரியர் ராமானுஜம் எழுதிய நுால் அறிமுக விழா நடந்தது.
புதுச்சேரி பேராசிரியர் ராமானுஜம் எழுதிய பிரெஞ்சிந்திய விடுதலை போராட்டம் - பாதையும் பயணமும் என்ற நுாலினை காலச்சுவடி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.இதன் அறிமுகம் விழா புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் நடந்தது.
வக்கீல் சங்க முன்னாள் தலைவர் குமரன் வரவேற்றார். அமைச்சர் லட்சுமி நாராயணன் நுாலினை அறிமுகம் செய்து வைத்தார். டாக்டர் நல்லாம் நுாலினை பெற்றுக்கொண்டார். கல்வி துறை முன்னாள் இணை இயக்குநர் ராமதாசு நுாலினை திறனாய்வு செய்து பேசினார். வரலாற்று ஆய்வு அறிஞர் ஜெயசீலஸ்டீபன் வாழ்த்தி பேசினார். நுாலாசிரியர் ராமானுஜம் ஏற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியை, புதுச்சேரி அருங்காட்சியக அமைப்பாளர் அறிவன் அருளி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாலாஜி, இளங்கோ, ராஜ்ய சபா எம்.பி., யின் செயலர் முருகராஜா, கல்வெட்டு ஆய்வாளர் வெங்கடேசன்,பேராசிரியர் ஆரோக்கியநாதன்உள்பட பலர் கலந்து கொண்டனர். வெங்கடகிருஷ்ணன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.நகர கூட்டுறவு வங்கி உதவி மேலாளர் பிரபாகர் நன்றி கூறினார்.