/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரியை தி.மு.க.,விற்கு ஒதுக்க வேண்டும் தொகுதி பங்கீட்டுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்புதுச்சேரியை தி.மு.க.,விற்கு ஒதுக்க வேண்டும் தொகுதி பங்கீட்டுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
புதுச்சேரியை தி.மு.க.,விற்கு ஒதுக்க வேண்டும் தொகுதி பங்கீட்டுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
புதுச்சேரியை தி.மு.க.,விற்கு ஒதுக்க வேண்டும் தொகுதி பங்கீட்டுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
புதுச்சேரியை தி.மு.க.,விற்கு ஒதுக்க வேண்டும் தொகுதி பங்கீட்டுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : பிப் 06, 2024 04:58 AM

புதுச்சேரி : ன்னை அறிவாலயத்தில் நடந்த தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழு கூட்டத்தில், புதுச்சேரி தொகுதியை தி.மு.க., விற்கு ஒதுக்க வேண்டும் என புதுச்சேரி தி.மு.க., நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
தமிழ்நாட்டை பின்பற்றி புதுச்சேரியிலும் காங்., தி.மு.க., கட்சிகள் கூட்டணியாக தேர்தலை சந்திக்கின்றன. கூட்டணியில் புதுச்சேரி தொகுதியினை பெற காங்., மற்றும் தி.மு.க., இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஏற்கனவே புதுச்சேரி தொகுதி காங்., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதால் காங்., இந்த தொகுதியை ஒதுக்க வேண்டும் என காங்., தரப்பில் வலியுறுத்தி வருகின்றனர்.
தி.மு.க., தரப்பிலும் புதுச்சேரி தொகுதி கேட்டு வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை அறிவாலயத்தில் தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் தொகுதி பங்கீட்டு குழுவில் அமைச்சர்கள் நேரு, வேலு, உதயநிதி , தங்கம் தென்னரசு ஆகியோர் இருந்தனர்.
கூட்டத்தில், புதுச்சேரி தி.மு.க., அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., தலைமையில், அவைத் தலைவர் எஸ்.பி., சிவக்குமார், தி.மு.க., எம்.எல்.ஏக்கள்., நாஜீம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், நாக தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதுச்சேரி தொகுதியை தி.மு.க., விற்கு ஒதுக்க வேண்டும், புதுச்சேரியில் தி.மு.க., வலுவாக உள்ளது. இதற்கு முன் நான்கு முறை புதுச்சேரி லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். கூட்டணியோடு நமது கட்சியும் வலுவாக இருப்பதால், தி.மு.க., விற்கு புதுச்சேரி தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
ஒருபடி முன்னேறி தொகுதியை தி.மு.க., விற்கு ஒதுக்கினால் வேட்பாளர் பட்டியலையும் கொடுத்தனர். இதையடுத்து தொகுதி பங்கீட்டு குழு இக்கருத்தினை பதிவு செய்து கொண்டு இது சம்மந்தமாக கட்சி தலைமை முடிவு எடுத்து உரிய நேரத்தில் அறிவிக்கும் என்று குறிப்பிட்டனர்.


