/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மும்பையில் அகில இந்திய மாநாடு புதுச்சேரி சபாநாயகர் பங்கேற்புமும்பையில் அகில இந்திய மாநாடு புதுச்சேரி சபாநாயகர் பங்கேற்பு
மும்பையில் அகில இந்திய மாநாடு புதுச்சேரி சபாநாயகர் பங்கேற்பு
மும்பையில் அகில இந்திய மாநாடு புதுச்சேரி சபாநாயகர் பங்கேற்பு
மும்பையில் அகில இந்திய மாநாடு புதுச்சேரி சபாநாயகர் பங்கேற்பு
ADDED : ஜன 28, 2024 04:43 AM

புதுச்சேரி : அகில இந்திய சபாநாயகர் மாநாட்டில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம் பங்கேற்றார்.
84வது அகில இந்திய சபாநாயகர்கள் மாநாடு மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நேற்று துவங்கியது. இந்த மாநாட்டில் பார்லிமெண்ட் சபாநாயகர் மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள சட்டசபை சபாநாயகர் பங்கேற்றனர். இதில் பங்கு பெற்ற புதுச்சேரி சபாநாயகர் செல்வம் பேசியதாவது:
எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கடமைகள் மற்றும் பொறுப்புகளை ஒழுக்கத்துடனும் கண்ணியத்துடனும் நிறைவேற்றும் விதம் நமது நாட்டின் ஜனநாயக அமைப்பை தீர்மானிக்கிறது. மக்களின் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ.க்கள் மக்களின் கருத்துக்களை தெரிவிப்பதிலும் அதை அவையில் விவாதிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே ஜனநாயகத்தை வலுப்படுத்தும் சட்டசபை கண்ணியத்தையும் பேண அவர்களுக்கு முறையான வழிகாட்டுதலும் உதவிகளையும் வழங்க வேண்டும்.
அவையின் தலைவர்கள் மக்களின் நலனுக்காக உறுதியான கொள்கைகளை வகுக்க சுதந்திரமான மற்றும் நியாயமான விவாதங்களை உறுதி செய்ய வேண்டும். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்த சம வாய்ப்பு வழங்க வேண்டும்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டு, அதே நேரத்தில் அவையின் கண்ணியத்தை குரைக்கும் இடையூறுகளை கட்டுப்படுத்த வேண்டும். ஜனநாயகத்தின் மீதான மக்களின் மாறாத நம்பிக்கையை வலுப்படுத்தவும் அதனை பேணிக் காக்கவும் சபையின் தலைவர்களுக்கு பெரும் பங்கு உள்ளது.
இவ்வாறு சபாநாயகர் பேசினார்.
இம்மாநாடு இன்று நிறைவு பெறுகிறது.