/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி பெண்ணிடம் ரூ. 22 லட்சம் மோசடி புதுச்சேரி பெண்ணிடம் ரூ. 22 லட்சம் மோசடி
புதுச்சேரி பெண்ணிடம் ரூ. 22 லட்சம் மோசடி
புதுச்சேரி பெண்ணிடம் ரூ. 22 லட்சம் மோசடி
புதுச்சேரி பெண்ணிடம் ரூ. 22 லட்சம் மோசடி
ADDED : செப் 25, 2025 03:26 AM
புதுச்சேரி : செல்லிப்பட்டை சேர்ந்த பெண், பகுதிநேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து, ரூ. 22 லட்சத்தை சைபர் மோசடி கும்பலிடம் இழந்தார்.
செல்லிப்பட்டை சேர்ந்த பெண்ணை, வாட்ஸ் ஆப் மற்றும் டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன்லைனில் பகுதி நேர வேலையாக வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார். இதை நம்பி, மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு தவணைகளாக ரூ. 22 லட்சத்து 5 ஆயிரம் முதலீடு செய்து, அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்தார்.
பின், அதன் மூலம் வந்த லாப பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.இதேபோல், லாஸ்பேட்டையை சேர்ந்த பெண் 3 லட்சத்து 15 ஆயிரத்து 700, திருபுவனையை சேர்ந்தவர் 57 ஆயிரத்து 799, கிருமாம்பாக்கத்தை சேர்ந்தவர் 11 ஆயிரத்து 774 என, 4 பேர் மோசடி கும்பலிடம் 26 லட்சத்து 96ஆயிரத்து 273 ரூபாய் இழந்துள்ளனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.