Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வில்லியனுார் பள்ளியில் குடியரசு தின விழா

வில்லியனுார் பள்ளியில் குடியரசு தின விழா

வில்லியனுார் பள்ளியில் குடியரசு தின விழா

வில்லியனுார் பள்ளியில் குடியரசு தின விழா

ADDED : ஜன 27, 2024 04:38 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : வில்லியனூர் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில், வாஞ்சிநாதன் இளம்தொண்டர் மன்றம் மற்றும் வில்வம் அறக்கட்டளை சார்பில், குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

தலைமை ஆசிரியை பஞ்சாத்தம்மா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நல்லாசிரியர் விருது பெற்ற மதிவாணன் கலந்து கொண்டு, மாணவர்கள் முன்னேற்றம் குறித்து பேசினார்.

விழாவில் வாஞ்சிநாதன் இளம்தொண்டர் மன்ற நிறு வனர் ராமன், லால் பகதுார் சாஸ்திரி மன்றத்தின் நிறுவனர் கலியமுருகன், வில்வம் பவுண்டேஷன் தலைவர் தசரதன், செயலாளர் அழகப்பன், முருகன், பரசுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார். முன்னதாக, பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் கவுரவிக்கப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us