/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ துாண்டில் முள் வளைவு அமைக்க கோரிக்கை துாண்டில் முள் வளைவு அமைக்க கோரிக்கை
துாண்டில் முள் வளைவு அமைக்க கோரிக்கை
துாண்டில் முள் வளைவு அமைக்க கோரிக்கை
துாண்டில் முள் வளைவு அமைக்க கோரிக்கை
ADDED : செப் 04, 2025 05:36 AM

புதுச்சேரி : சோலை நகர் பகுதியில் கடல் அரிப்பினை தடுக்க துாண்டில் முள் வளைவு அமைக்க வேண்டுமென, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணன் தலைமையில் மீனவர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில், முத்தியால்பேட்டை தொகுதி, சோலை நகர் வடக்கு, தெற்கு பகுதிகளின் கடலோர பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலையில், அடிக்கடி ஏற்படும் கடல் அரிப்பால், மீனவர் குடும்பத்தினர் அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.
இதனிடையே கடல் அரிப்பை தடுக்க கடந்த 2008ம் ஆண்டு ரூ. 8.75 கோடி மதிப்பில், துாண்டில் முள் வளைவு அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, பணிகள் முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீனவர்களின் பாதுகாப்பு கருதி, சோலை நகர் கடலோரத்தில் துாண்டில் முள் வளைவு அமைக்கும் பணியினை புதுச்சேரி அரசு உடனே தொடங்க வேண்டும் என, குறிப்பிடப்பட்டிரு ந்தது. மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் ரங்கசாமி, மீனவர்களின் கோரிக்கை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தார்.