/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓய்வு ஆசிரியர்கள் தவிப்பு ராமலிங்கம் எம்.எல்.ஏ., பேச்சு ஓய்வு ஆசிரியர்கள் தவிப்பு ராமலிங்கம் எம்.எல்.ஏ., பேச்சு
ஓய்வு ஆசிரியர்கள் தவிப்பு ராமலிங்கம் எம்.எல்.ஏ., பேச்சு
ஓய்வு ஆசிரியர்கள் தவிப்பு ராமலிங்கம் எம்.எல்.ஏ., பேச்சு
ஓய்வு ஆசிரியர்கள் தவிப்பு ராமலிங்கம் எம்.எல்.ஏ., பேச்சு
ADDED : மார் 19, 2025 06:29 AM

புதுச்சேரி : சட்டசபை பூஜ்ய நேரத்தில் ராமலிங்கம் எம்.எல்.ஏ., பேசியதாவது:
அரசு உதவி பெறும் பள்ளி அனைத்திலும் 95 சதவீதம் அரசும், 5 சதவீதம் பள்ளி நிர்வாகமும் சம்பளம் வழங்குகின்றன. அரசு உதவி பெறும் பள்ளியில் தற்போது வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு 5 சதவீதம் பள்ளி நிர்வாகம் கட்டுகின்றன. அரசாங்கமும் 95 சதவீத தொகையை கொடுக்கின்றது. இதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகம் 5 சதவீதம் சரியாக கட்டுவதில்லை. கோர்ட் உத்தரவின்படி பள்ளி நிர்வாகம் 5 சதவீதம் கட்டினால் தான் அரசாங்கம் 5 சதவீதம் கொடுக்கும். இதனால் அப்பள்ளிகளில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நிலைகுலைந்துள்ளனர். தள்ளாத வயதில் தளர்ந்துபோய் உள்ளனர். பள்ளி நிர்வாகம் கட்டும் 5 சதவீதம் கூட தேவையில்லை. அரசு 95 சதவீதம் கொடுத்தால் கூட போதும் என்ற மனநிலையில் உள்ளனர். கடந்த 20 மாதமாக கிடைக்காமல் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும்.