/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாதுகாப்பான குடிநீர் கேட்டு உரிமை மீட்பு குழு ஆர்ப்பாட்டம் பாதுகாப்பான குடிநீர் கேட்டு உரிமை மீட்பு குழு ஆர்ப்பாட்டம்
பாதுகாப்பான குடிநீர் கேட்டு உரிமை மீட்பு குழு ஆர்ப்பாட்டம்
பாதுகாப்பான குடிநீர் கேட்டு உரிமை மீட்பு குழு ஆர்ப்பாட்டம்
பாதுகாப்பான குடிநீர் கேட்டு உரிமை மீட்பு குழு ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 18, 2025 03:05 AM

புதுச்சேரி: நெல்லிதோப்பு தொகுதியில் பாதுகாப்பான குடிநீர் வழங்க வலியுறுத்தி, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சாரம் பாலம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாசடைந்த குடிநீர் பாட்டில்களை கையில் பிடித்தபடி. பொதுப்பணித்துறையை கண்டித்து கோஷமிடப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் பேசுகையில், நெல்லித்தோப்பு தொகுதியில் நிலவும் பொதுப்பணித்துறை பிரச்னைகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.சக்தி நகரில் பழுதடைந்த குடிநீர் குழாய்களை உடனடியாக மாற்றி, புதிதாக அமைக்க வேண்டும். அரசு சார்பில் வழங்கப்படும் குடிநீர் கேன்களை வீடு வீடாக சென்று வழங்க வேண்டும். தேவையான இடங்களில் கூடுதலாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும். பருவ மழைக்கு முன்பாக, அனைத்து வாய்க்கால்களை துார் வார வேண்டும். பொதுப்பணித்துறை குறித்த கோரிக்கைகள் மீது 15 நாளில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றார்.ஆர்ப்பாட்டத்தில், மாநில தலைவர் குப்புசாமி, சதாசிவம், சங்கர், வெங்கடேசன், முருகன், சேகர், சக்திவேல், பிரபு, ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.